திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் சித்திரை மாதத்திற்கான பவுர்ணமி வரும் மே 5ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த நிலையில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1800 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மே 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரிவல பாதையில் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் ஓய்வு கூடங்கள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.