மதுரை மத்திய சிறையில் 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சிறை அங்காடியில் சிறைவாசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இனிப்பு, கார வகைகள், ஆயத்த ஆடைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வந்த பிரிசன் பஜார் விற்பனை அங்காடி காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி வழிகாட்டுதலின்படி விரிவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட வளாகமாக மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த சிறை செய்பொருள் விற்பனை வளாகமாக மாற்றியமைக்கப்பட்டு நேற்று காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி முன்னிலையில், பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா திறந்து வைத்தார். இந்த ஒருங்கிணைந்த விற்பனைக்கூடத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய சிறைகளில் சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதுடன், இந்த விற்பனை வளாகத்தில், சிற்றுண்டி உணவகம், பேக்கரி பொருட்கள் விற்பனை, இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை, கைலி, சுங்கடி சேலி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மிக விரைவாக மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மேற்கொண்டுள்ளார் மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர்(பொ) பரசுராமன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்..