கோவை பீளமேடு பி.ஆர் புரத்தில் லிங்க் டு லிங்க் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான வட்டி, அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால் உறுதி கூறியபடி வட்டி ஊக்கத் தொகை அசல் ஆகியவற்றை வழங்கவில்லை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர். அவர் மாநகர குற்றப் பிரிவு காவல் துறைக்கு விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி உதவி ஆணையர் குணசேகரன் தலைமையிலான காவலர் விசாரிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் சுதாகர் பங்குதாரர் ஹரிணி மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி செய்த நிதி நிறுவனம் கோவையில் மட்டுமின்றி சேலம், சென்னை, வேலூர் ஆகிய இடங்களிலும் கிளைகளுடன் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது..