அமெரிக்காவின் FIRST REPUBLIC வங்கி திவால்.. வாடிக்கையாளர் வைப்புத் தொகையில் $102 பில்லியன் இழப்பு..!

மெரிக்காவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான FIRST REPUBLIC வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கிகள் திவாலாகின. இந்நிலையில் FIRST REPUBLIC வங்கி திவாலானதாகவும் அந்த வங்கியை ஜே.பி.மோர்கன் வங்கி கையகப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FIRST REPUBLIC வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19 லட்சம் கோடிகளாக (229 பில்லியன் அமெரிக்க டாலர்) உள்ள நிலையில், வாடிக்கையாளர் வைப்புத்தொகையில் $102 பில்லியன் இழந்து அந்த வங்கியின் 84 அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்துகள் அனைத்தும் ஜே.பி.மோர்கன் வங்கியின் வசம் சென்றுள்ளன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு, வாராக்கடன் அதிகரிப்பு, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் FIRST REPUBLIC வங்கி திவாலாகி உள்ளதாக வங்கித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.