கோவையில் தடையை மீறி மது விற்ற 17 பேர் கைது..!

கோவை மே 2 மே தின விழாவையொட்டிநேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.கோவையில் தடையை மீறி சில டாஸ்மாக் பார்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள் .அப்போது மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். 270 மதுபாட்டில்கள், பறிமுதல் செய்யப்பட்டது.