1,222 இடங்களில் சாதனை விளக்க கூட்டங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

1,222 இடங்களில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடத்தி அரசின் சாதனை விளக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது. தமிழக்தில் வரும் மே 6,7,8 ஆகிய நாட்களில் 1,222 இடங்களில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த இடங்களில் திமுக நிர்வாகிகள் இந்த சாதனை விளக்க கூட்டத்தை நிகழ்த்தி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடையே விளக்க உள்ளனர். காஞ்சிபும் வடக்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்..