தெரு நாய்: காப்பாற்றிய கோவை பெண் – சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!

கோவை, காளப்பட்டி சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த தெரு நாய், உடல்நிலை முடியாமல் எழுந்து நடக்க இயலாமல் தரையில் படுத்து இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த நாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தகுந்த சிகிச்சை கொடுத்து வளர்ந்து வந்தார். இந்நிலையில் அந்த நாய்க்கு மீனு என்று பெயர் வைத்து தற்பொழுது ஆரோக்கியமாக, அழகாக இருக்கும் புகைப்படத்தை அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் நாயை கல்லால் அடித்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் ஒரு நாய் மீது ஆசிட் வீசி காயங்களோடு சுற்றித்திரிந்த புகைப்படமும் வெளியானது. பொதுமக்கள் விலங்குகளை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பது விலங்குகள் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அந்த நாய் நன்றாக இருக்கும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.