மதுரை மாவட்டத்தில் 22 அரசு பள்ளிகள் உட்பட 132 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது மிகந்த மகிழ்வுக்குரியது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் +2 தேர்வெழுதிய 34751 பேரில் 33304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.6% மாணவிகள் 98% பேர். மொத்தமாக மதுரை மாவட்டத்தில் 95.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைவருக்கும் எனது அன்பு வாழ்த்துகள்.
மாவட்டத்தில் 22 அரசு பள்ளிகள் உட்பட 132 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது மிகந்த மகிழ்வுக்குரியது.
30 பாடப்பிரிவுகளில் 2744 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்வு.
முதல் முயற்சியில் பெறப்படுவது மட்டுமே தேர்ச்சி அல்ல. ஏதாவது ஒரு காரணத்தினால் வாய்ப்புகளை தவற விட்டவர்கள் மீண்டும் முயன்றால் தேர்ச்சி பெற்று உயர்கல்வியிலும் வாழ்விலும் சாதிக்கலாம். வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.