கோவை : தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் கவர்னரை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் கோவை சுற்றுலா மாளிகைக்கு சென்றார். இரவில் அங்கு தங்கி ஒய்வு எடுத்தார். இன்று ( சனிக்கிழமை) எட்டிமடை அமிர்தா விஷ்வ வித்ய பீடம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சி 20 மாநாட்டில் தொழில்நுட்பம் பாதுகாப்பு வெளிப்படத் தன்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜேஷ் பண்ட்,, சுவாமி அமிர்தா கருப்ப நந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு சென்னை புறப்படுவார்..