கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 119 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் 26 இடங்களிலும் மற்ற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேகர் நாடக காங்கிரஸ் தலைவர்களை ரிசார்ட்டுகளுக்கு அனுப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த செய்திகள் தவறானவை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கட்சி யாரையும் ரிசார்ட்டுக்கு மாற்றாது என்றும் அவர் கூறினார். மேலும் “நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். முடிவுகளுக்காக காத்திருப்போம்,” என்று கூறினார்.