கோவை :மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர்கணேசன் (வயது 55) இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கணேசன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் மளிகை கடையில் இருந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். கடைக்கு எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடைக்கு ஒட்டி வருபவர் ரவி ( வயது 58) இவர் காரமடை ஊராட்சி ஒன்றிய குழு திமுக உறுப்பினராக உள்ளார் .ரவி மற்றும் அவருடன் சித்தராசம்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 35) இடையர்பாளையம் ரோடு முருகேசன் (வயது 53) துரைசாமி வயது 50 ஆகியோர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். அப்போது கணேசன் அவர்களிடம் சிகரெட்டுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர்கள் 4 பேரும் பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கணேசன் மற்றும் அவரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கடையை உடைத்து சேதப்படுத்தினார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரவி, பார்த்திபன், முருகேசன், துரைசாமி ஆகியோரை கைது செய்தனர்.