கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ‘வெள்ளிவயலை சேர்ந்த கார்த்தி ( வயது 27) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..