தமிழக அமைச்சர் பொன்முடி ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி மே 31 ஆம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதலமைச்சர் அளித்த பதில் கடிதத்தில் அமைச்சரை நீக்கவோ நியமிக்கவோ முதலமைச்சருக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. அரசியல் சாசனத்தின்படி இதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அரசியல் சாசனப்பிரிவு 164(1)-ஐ மேற்கோள் காட்டியிருந்தார். மேலும், அந்த கடிதத்தில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்ககூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் முதலமைச்சருக்கு தான் இருக்கிறது, ஆளுநருக்கு இல்லை என்பதையும் தெரிவித்திருந்தார். குஜராத் அமைச்சராக இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா மீதும் வழக்கு நிலுவையில் இருந்ததை அந்த கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி ஆளுநருக்கு அரசியல் பாடம் எடுத்திருக்கிறார்.