ஓட்டுநர்களுக்கு தங்கும் விடுதி – தமிழ்நாடு அரசாணை வெளியீடு..!

வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை வழங்க கடந்த 23ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும்.

வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டாவிலும், வாகனத்திலும் தூங்குகின்றனர். சரியான தூக்கம் இன்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் நிலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு அறை வழங்க அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர்கள் தங்கும் அறைக்கான குறைந்த கட்டணத்தை வாகன பார்க்கிங் கட்டணத்துடன் சேர்க்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் வாடிக்கையாளர்களுடன் வரும் ஓட்டுனர்களுக்கு கழிவறை வசதியுடன் கூடிய அறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.