டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேலே, இன்று அதிகாலை ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரதமரின் இல்லத்திற்கு அருகே, ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டதாக தகவல் கிடைத்தது. பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, அதிகாலை 5:30 மணிக்கு காவல்துறையை தொடர்பு கொண்டார். விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் நடத்தப்பட்டது,
ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையை (ATC) தொடர்பு கொண்டாலும், பிரதமர் இல்லத்திற்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை. எனினும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரியவரும் ” என்றுஅறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகயில், இன்று அதிகாலை ட்ரோன் பறந்தால் பரபரப்பான சூழல் நிலவியது.