நகை கடையில் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி- கோவை தம்பதி கைவரிசை..!!

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 50 )இவர் ராஜ வீதியில் தங்கம் – வெள்ளி கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை செட்டி வீதி,பாலாஜி அவென்யூவை சேர்ந்த ரகுநாத் அவரது மனைவி ஸ்ரீலேகா ஆகியோர் 2 கிலோ சுத்த தங்கம் வாங்கிச் சென்றனர்.கடந்த ஒரு வருடம் ஆகியும் அதற்கு பணம் கொடுக்கவில்லை.மோசடி செய்து விட்டனர். இதன் மதிப்பு ரூ 1 கோடி இருக்கும். இது குறித்து ரமேஷ் குமார் கடைவீதி போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி ரகுநாத் அவரது மனைவி ஸ்ரீலேகா ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.