சென்னை: சென்னையில் ஒரே இரவில் மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் தட்டிதூக்கி உள்ளனர்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ளனர்.. புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார்..
அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த சங்கர் மாற்றப்பட்டு ஆவடி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.. அந்தப் பதவியில் இருந்த அருண், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக பதவி ஏற்ற 2 அதிகாரிகளும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்களை குறைப்பது குறித்து தீவிர ஆலோசனையை நடத்தினார்கள்.. இந்த ஆலோசனையை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், சென்னை, தாம்பரம், ஆவடி தவிர மாநிலத்தில் உள்ள மற்ற போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளர்.
குறிப்பாக, 10 கட்டளைகளை பிறப்பித்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் ரவுடிகள், குற்றவாளிகளுக்கு எதிராக வேட்டைகள் ஆரம்பமாகியிருக்கிறதாம்.. அதாவது, சென்னை மாநகர போலீஸை பொறுத்தவரை, மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிதாக ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் மட்டும் மொத்தம் 25 காவல் நிலையங்கள் உள்ளன..
இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வருகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காகத்தான், புதிய கட்டளைகளை புதிய கமிஷனர் பிறப்பித்திருந்தார்.. அதன்படி, அதிரடி ஆபரேஷன் ரெடியானது.. இதற்காகவே, போலீசார் களமிறக்கப்பட்டனர்.. ரவுடிகள் குறித்த லிஸ்ட் தயாரானது.. கொடூர கொலைகள், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் பெரிய “தாதா”க்கள், “A பிளஸ்” ரவுடிகள் வகைப்படுத்தப்பட்டனர்.
இதில் கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள் ‘A’ பிரிவிலும், அடிதடி, மாமூல் வசூலிக்கும் ரவுடிகள், “B” பிரிவிலும், கொலை முயற்சி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் ரவுடிகள், “C” பிரிவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதையடுத்து, கோர்ட்டில் ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வரும் இவர்களை கைது செய்யவே நேற்று முன்தினம் அதிரடி ஆரம்பமாகி, ரவுடிகளுக்கு எதிராக விடிய விடிய வேட்டை நடத்தப்பட்டது.
இதில் ஒரே இரவில், 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.. இவர்கள் அனைவருமே கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்..
இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர், கோர்ட்டு வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.