ராகுல் மேல்முறையீடு மனு தள்ளுபடி- குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பிரதமர் மோடியின் சமூகம் குறித்த அவதூறாக பேசி, அந்த சமூகத்திற்கு கலங்கத்தை விளைவித்ததாக கூறி, ராகுல் காந்தி குற்றவாளி என்று சூரத் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது..

மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக அவர் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். மேலும், அடுத்த ஆறு ஆண்டுகள் எந்த தேர்தலிலும் ராகுல்காந்தி போட்டியிட முடியாத நிலை உருவாகியது.

தீர்ப்பை எதிர்த்து, அதே சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவையும் சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்வதாக குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில், சூரத் நீதிமன்ற விசாரணை சரியாக உள்ளது. அதில் நாங்கள் தலையிடவில்லை என்று கூறி, ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

இதனையடுத்து ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்வதே ஒரே வழி, மேல்முறையீடு செய்யவில்லை எனில் ராகுல்காந்தி சிறைக்கு செல்வார் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.