நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது.
அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தினமும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சின்ன வெங்காயம் கடந்த ஒரு வாரமாக விலையேற்றதின் காரணமாக 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று வெங்காயத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி, மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 180 ரூபாய்க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளியை தொடர்ந்து அடுத்தடுத்து உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.