கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா இடைச்சோலைப்பகுதியில் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு சீறிவந்த காட்டெருமை ஆட்டோவை முட்டித் தள்ளி தாக்கியுள்ளது . இதில் ஆட்டோ ஓட்டுனர் விவேகானந்தன் வயது 32 மற்றும் பயணி செல்லத்துரை வயது 38 ஆகியோர் காயமடைந்தனர். இதில் ஆட்டோ ஓட்டுனர் சிறுகாயத்துடனும் பயணி செல்லத்துரை அதிக காயமடைந்து தப்பித்துள்ள நிலையில் செல்லத்துரை வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்..
வால்பாறையில் ஆட்டோவை தாக்கிய காட்டெருமையால் இருவர் காயம்..
