வன ஊழியர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்..!

ஈரோடு மாவட்டம்:  பண்ணாரி வனச்சோதனைச்சாவடியில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய வனஊழியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 48வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமணம் மண்டபத்தில் புதுவடவள்ளியில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தலைவராக எஸ்.கே.பொன்னுச்சாமி, செயலாளராக கே.சின்னச்சாமி, பொருளாளராக  எஸ்.எம்.செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் தலைவர் சி.தனராஜ் பேசுகையில், பண்ணாரி சோதனைச்சாவடியில் அரசு நிர்ணித்த நுழைவுவரியை செலுத்திய பிறகும் ரூ.30 கேட்டு வனத்துறையினர் தொந்தரவு செய்துள்ளனர். தர மறுத்த ஓட்டுநரை வனத்துறையினர் கடுமையாக தாக்கியதுடன் செல்போன் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம் போலி ரசீது வழங்கி கட்டணம் வசூலித்துள்ளனர். இதற்கு வனத்துறை உயர்அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் குறித்து வனத்துரை அமைச்சரிடம் புகாராக தெரிவிப்போம். லாரி ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டத்தை தெரிவிக்கிறோம் என்றார். மேலும் கூட்டத்தில் லாரி உரிமையாளர் சங்கத்தில் 32 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நாராயணன் மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..