சிங்காநல்லூரில் ரூ.150 கோடியில் புதிய மேம்பாலம்..!!

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது தடுப்புகள் அமைத்து திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் நெரிசல் ஓரளவுதான் குறைந்துள்ளது. காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டு வருகிறார்கள். சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது .மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் முதல் திட்டப் பணிகள் திருச்சி ரோடு பகுதியில் அமைக்கப்படாததால் மேம்பாலத்துக்கான டென்டரை அரசு கோரி உள்ளது .இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- சிங்கநல்லூரில் ரூ.110 கோடியில் , புதிய மேம்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விட அரசு அனுமதி அளித்து அணை வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை இ-டெண்டர் கோரி உள்ளது. ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதும் மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் .இதன் மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.