கோவை நகை கடையில் வெள்ளி சாமான்கள் திருட்டு – ஊழியர் மீது புகார்..!

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வெள்ளி சாமான்கள் விற்பனை பிரிவில் ஆய்வு செய்த போது 495 கிராம் வெள்ளி சாமான்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கடையின் துணை மேனேஜர் மயில்சாமி கடைவீதி போலீசில் புகார் செய்தார் .புகாரில் வெள்ளி நகை விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்த விஜயபாஸ்கர் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..