கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் மூலம் புது ,புது முறைகளை கையாண்டு மோசடிகளை மர்ம கும்ப கும்பல் அரங்கேற்றி வருகிறது. அவர்கள் “பெடக்ஸ் இன்டர்நேஷனல்” கொரியர் மூலம் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை தேடி கண்டறிகிறார்கள் .அதில் சில தொழில் அதிபர்களை குறி வைத்து தங்களை மும்பை கிரைம் பிராஞ்ச்போலீஸ் என்று கூறி செல்போனில் தொடர்பு கொள்கிறார்கள். அப்போது போலீஸ் என்பதை குறிக்கும் சின்னம் ( லோகோ )வரும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனால் அந்த அழைப்பை பார்ப்பவர்கள் போலீசார் தான் அழைக்கிறார்கள் என்று நம்பி விடுகிறார்கள். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள் அவர்கள் தொழில் அதிபர்களிடம் வெளிநாட்டிலிருந்து நீங்கள் போதை பொருள் இறக்குமதி செய்வதாக தகவல் வந்துள்ளது. எனவே வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், தங்களை கைது செய்யாமல் இருக்கவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலம் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு உடனே செலுத்துமாறு கூறுகிறார்கள் .மேலும் அந்த இணைப்பை தொடர்பில் வைத்துக் கொண்டு மற்றொரு செல்போனில் அழைத்தும் பணத்தை உடனடியாக அனுப்புமாறு கூறி மிரட்டுகிறார்கள். இதனால் அச்சமடையும் தொழிலதிபர்கள் வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பணத்தை அனுப்பி வைக்கிறார்கள் .இது போன்ற மோசடி லட்ச கணக்கில் பணத்தை இழந்தவர்கள் கோவையில் இதுவரை 5 பேர் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஆன்லைனில் முதலீடு பெயரில் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது .முதலில் ஆன்லைனில் தாங்கள் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு முதலீடு செய்தால் அதிக தொகுதி தருவதாக ஆசை வார்த்தை கூறி மெசேஜ் அனுப்புகிறார்கள் .அதை நம்பி லட்ச கணக்கில் முதலீடு செய்யும்போது ஏமாற்றி விடுகிறார்கள்.கோவை நகரில் மட்டும் இதுபோன்று 1000 மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.