கார் மோதி வடமாநில தொழிலாளி சாவு..

கோவை- அவிநாசி ரோட்டில் உள்ள நீலாம்பூர் பி. எஸ். ஜி. பவுண்டரி அருகே நேற்று ரோட்டை கடந்த ஒருவர் மீது அந்த வழியாக.வேகமாக வந்த கார் மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் பஸ்வான் (வயது 50) என்பது தெரிய வந்தது. இவர் நீலாம்பூரில் உள்ள பி.எஸ். ஜி.பவுண்டரி குடியிருப்பில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த திண்டுக்கல் அசோக் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.