கோவை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் “பெஸ்ட் டிரேடிங் கம்பெனி” என்ற பெயரில் சிமெண்ட் மொத்த விற்பனை நிலையம் உள்ளது . இங்கு பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 35) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் ( வயது 30) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிமெண்ட் விற்ற பணத்தை நிறுவனத்துக்கு செலுத்தாமல் ரூ. 26 லட்சத்து 3,287 மோசடி செய்தது தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேனேஜர் ராதா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்கள் பிரபா தேவி, செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரேமதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சபரி ஈஸ்வரனை நேற்று கைது செய்தனர்.குணசேகரனை தேடி வருகிறார்கள். இவர்களில் சபரீஸ்வரன் அந்த நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகவும், குணசேகரன் கேஷியராகவும் வேலை பார்த்து வந்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..