போலீஸ் போல் நடித்து சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேர் கைது..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 5-ம் தேதி பல்லடம்- கொசவம் பாளையம் ரோட்டில் சாலை ஓரமாக நின்று தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களிடம் தங்களை போலீஸ் என்று கூறி தனியாக இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று மிரட்டினார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி தாங்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர் .பல்லடத்தை அடுத்த காளி வேலம்பட்டி பகுதிக்கு அவர்களை கடத்திச் சென்றனர் .அங்கு காதலனை ஆயுதங்களை காட்டி மிரட்டி தனியாக உட்கார வைத்தனர் .பின்னர் அந்த 17 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டிவிட்டு அவர்களை பல்லடம்- கோவை ரோட்டில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர் .இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரண நடத்தி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசா நடத்திய போது அவர்கள் பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த சேதுராமன் மகன் ரமேஷ் குமார் ( வயது 32) அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜான்சன் ( வயது 26) பல்லடம் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்த பாபு மகன் பார்த்திபன் (வயது 25) மற்றும் அடையாளம் காணக்கூடிய ஒருவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ் குமார், ஜான்சன், பார்த்திபன் 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.