கோவை ரங்கே கவுண்டர் வீதியில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு சொந்தமாக ஒப்பணக்கார வீதி ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள சுமார் 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ளான 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக கட்டிடங்களை 7 பேர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து சமய அறநிலையைத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் இருந்து நிலம் அதிரடியாக மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..
கோவை கோவிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!
