கோவை விமான நிலையத்தில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் – சென்னையை சேர்ந்த 2 பேர் கைது..!

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை ,டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிங்கப்பூர் ,சார்ஜா ஆகிய நாடு இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன .இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை விமானத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது .இந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் வந்தனர். இதில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் அவர்கள் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது . அந்த3பேரிடம் இருந்து மொத்தம் 4.1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 கோடியே 50 லட்சம் ஆகும். இந்த தங்கத்தை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி (வயது 50) சாகுல் அமீது ( வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .ஆனால் கைது செய்யப்படவில்லை. இது குறித்து மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:- சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் வந்த 3 பயணிகள் தங்களது உள்ளாடைகளில் 4.1 கிலோ தங்கத்தை கட்டியாகவும் கடத்தி வந்தனர் .இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு பயணி ரூ 50 லட்சத்திற்கு கீழ் தங்கம் கடத்தி  வந்ததால் அவர் கைது செய்யப்படவில்லை. என்று கூறினார்கள்..