கோவை டாட்டாபாத் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் டாக்டர்ஸ் காலணியில் ஒரு வணிக வளாகத்தில் மாடியில் பணம் வைத்து சீட்டாடுவதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (47 )சிவக்குமார் ( 40 ) ராஜ்குமார் ( 47 ) சுப்ரமணியம் (58 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரு 28,100 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..