கோவை போத்தனூர் பாரதிநகரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது.இங்கு பொருட்களின் இருப்பு தணிக்கை செய்யப்பட்டது அப்போது ரூ 6 லட்சத்து 6 ஆயிரத்து 677 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் தினேஷ் பாபு போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த பொருட்களை அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்த சுந்தராபுரம் குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்த ஜிதேந்திரா ( வயது 19 )திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.