ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பாச்சாமல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (92). இவர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தார். காலை பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலம் அருகே முதியவர் பொன்னுசாமி கை கால் கழுவுவதற்காக கீழ்பவானி வாய்க்கால் கரையில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதைக் கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய பொன்னுசாமியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் நீரில் மூழ்கிய பொன்னுசாமி உயரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் பலி..
