கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள டி. வி. எஸ். நகரில் சி.எஸ்.ஐ .கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு 2012 முதல் 2022 வரை வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ரூ 58 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஆலய பொருளாளர் பிரின்ஸ் போஸ் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் அந்த ஆலயத்தில் கணக்காளராக (அக்கவுண்டன்ட்) வேலை பார்த்து வந்த சைலஜா என்பவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விசாரணையில் சைலஜா போலி தஸ்தாவேஜு கள், பாஸ்புக், அக்கவுண்ட் புக் தயாரித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.