ரூ.1.79 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் வாங்கி மோசடி- 4 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை : மும்பையை சேர்ந்தவர் உத்தம் ஷா (வயது 44) மும்பையில் நகை மொத்த வியாபாரமும் நகைப்பட்டறையும் நடத்தி வருகிறார்.இவரிடம் கோவை தெற்கு உக்கடம் பைபாஸ் ரோடு ,சாவித்திரி நகரை சேர்ந்த முன்னா மண்டேல், நியாஸ் மாலிக், மாசின் மாலிக் ஜெயரூன் மாலிக் ஆகியோர் 8 கிலோ நகைகள் வாங்கி இருந்தனர். இதற்கு 5 கிலோ சுத்த தங்கத்தை உத்தம் ஷாவிடம் கொடுத்தனர். மீதி 3 கிலோ 625 கிராம் நகைக்கு தங்கம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதன் மதிப்பு ரூ 1 கோடியே 79 லட்சம் இருக்கும்..இது குறித்து உத்தம்ஷா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தெற்கு உக்கடம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த முன்னா மண்டேல், நியாஸ் மாலிக், மஸ்லின் மாலிக், ஜெய்ருல் மாலிக் ஆகியோர் மீது மோசடி உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.