2-வது மனைவி, மாமியார் மீது உருட்டு கட்டை தாக்குதல் – ஓட்டல் அதிபர், தந்தை கைது..!

கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் குமார் ( வயது 39) ஓட்டல் மற்றும் நகை அடமானக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி ஸ்ரீதேவி, இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமார் தனது மனைவிக்கு தெரியாமல் கே. ஜி. சாவடி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் குமார் இரண்டாவது திருமணம் செய்த தகவல் முதல் மனைவி ஸ்ரீதேவிக்கும் உறவினர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் குமாரை கண்டித்துள்ளனர். இதனால் அவர் தனது இரண்டாவது மனைவி பூங்கொடி வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று இது குறித்து கேட்க 2-வது மனைவி பூங்கொடி, தனது தாயார் ரமணியுடன் கணவர் குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரண்டாவது மனைவி பூங்கொடி,மாமியார் ரமணி ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து கே ஜி சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டாவது மனைவி பூங்கொடி, மாமியார் ரமணி ஆகியோரை தாக்கியதாக கணவர் குமார்,அவரது தந்தை பெரியசாமி ஆகியோர் கைது செய்யபட்டனர்.