தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா நவநீதபுரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் , பரிசுகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வளாகத்தில் செயல்படாமல் உள்ள நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், செயல்படாமல் உள்ள அம்மா நூலகத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் ரம்யா, கவுன்சிலர்கள் நீலகண்டன் , லெனின், மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக், தி.மு.க. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கமலா ரவி, மாநகரப் பொருளாளர் காளையார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..