விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் மசூதி முன்பு கற்பூரம் ஏற்றியதால் போலீசாருக்கும், இந்து முன்னனியினருக்கும் இடையே தள்ளு முள்ளு..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பெருமாள் கோவில் தெருவில் இந்து முன்னனி சார்பில் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் முக்கிய இடங்களில்  விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு விட்டு பின்னர் முதல் நாளே செங்கத்தின் முக்கிய வீதியான பஜார் சாலை மற்றும் மசூதி வீதி வழியாக இந்து முன்னனியினர்  விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று ஊர்வலத்தின் போது இந்து முன்னனியினர் மசூதி எதிரே ஏற்றி வழிபட முயன்ற போது கற்பூரம் மீது போலீசார் தண்ணீர் ஊற்றியதால் போலீசாருக்கும் இந்து முன்னனி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதி முமுவதும் பரபரப்பு ஏற்பட்டது..