ஊக்க மருந்துகள்… மக்களே உஷார்..!!

கொழுப்பை எரிக்கும்; வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; வெப்பத்தை தூண்டிவிடும் ‘ இவையெல்லாம் விளையாட்டு வீரர்களுக்கான கூடுதல் ஊட்ட சத்து மருந்துகளின் விளம்பரங்கள். இந்த சத்து மாத்திரைகளில் வீரர்களின் திறனை அதிகரிக்கும் சேர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகளில் என்ன உள்ளது என்பது எவராலும் ஊகிக்க முடியாததாகத் தெரிகிறது.

60 துணை சத்து மருந்துகளை சாமர்வில் நகரிலுள்ள கேம்பிரிட்ஜ் உடல்நல நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் பீட்டர் கோஹென்னும் அவரது குழுவினரும் சோதித்ததில் 34 சத்து மருந்துகளில் மட்டுமே லேபிளில் குறிப்பிட்ட சேர்மானங்கள் இருந்தன. மேலும் 11%இல் மட்டுமே அதாவது ஆறில் மட்டுமே சரியான அளவில் இருந்தன.. 40% மாத்திரைகளில் கண்டுபிடிக்கக்கூடிய அளவு சேர்மானங்கள் இல்லவே இல்லை என்கிறது ஜூலை 17ஆம் தேதியிட்டு JAMA Network Open என்கிற இதழில் வெளிவந்துள்ள அறிக்கை. 28 மருந்துகளில் .02%இலிருந்து 334% வரை குறைவாகவும் கூடுதலாகவும் இருந்தன. சிலர் இந்த மருந்துகளுக்கு கூருணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.மேலும் அவர்களுக்கு தேவையான அளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும் அபாயமும் உள்ளது என்கிறார் ஹூஸ்டனிலுள்ள பாய்லர் கல்லூரியை சேர்ந்த சத்துணவு மற்றும் நோயியலாளர் லுயிஸ் ரஸ்ட் வெல்ட். ஏழு மருந்துகளில் அமெரிக்க உணவுக்கு கழகத்தால் தடை செய்யப்பட கூட்டுப் பொருள் இருந்தத்தை கோஹெனின் குழுவினர் கண்டனர். முன்பும் நூற்றுக்கணக்கான சத்து மருந்துகளில் தீங்கு விளைவிக்கும் மருந்துகள் கலப்படம் செய்யப்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் கண்டிருந்தனர்.

ஒரு சத்து மருந்து சந்தையில் கிடைக்கிறது என்பதாலேயே அது பாதுகாப்பானது,திறனுள்ளது அல்லது விளம்பரப்படுத்தப்பட்டுள்ள சேர்மானங்கள் அதில் உள்ளது என்று பொருளல்ல என்கிறார் பெதஸ்ட்டாவிலுள்ள சீருடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த சத்துணவு சிறப்பு மருத்துவர் பேட்ரிஷி யா டியூஸ்ட்டர். ஒரு சாதாரண மனிதருக்கு சத்துணவு எடுத்துக் கொள்வது குறித்து வெளி உதவி இல்லாமல் சரியான முடிவு எடுப்பது இயலாது. இதில் மிகுந்த ஐயத்துடன் அணுகவேண்டும் என்கிறார் கோஹென். ‘கொழுப்பை எரிக்கப் போகிறீர்கள்’ உங்கள் திறமையை அதிகரிக்கப் போகிறீர்கள்’ போன்ற விளம்பரங்கள் உண்மையாக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளன. உண்மையாக இருக்கவும் முடியாது.