சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் விபரீதம்… பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பரிதாப பலி..

நீலகிரி மாவட்டம் ஊட்டி கொறையட்டி உனு பட்டியைச் சேர்ந்தவர் தர்மகுமார். அவரது மகன் பிருதிவிராஜ் (வயது 27) இவர் நேற்று சூலூர் கலா கார்டனைச் சேர்ந்த கணேஷ் குமார் ( வயது 30) என்பவருடன் பைக்கில் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரிதிவிராஜ் ஓட்டினார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் பாய்ந்தது. இதனால் இருவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் பிருதிவராஜ் இறந்து விட்டார். கணேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . இது தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..