தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடி நான் ரூ 1 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபேஷ் செய்த ஜாகிர் உசேன் அதிரடி கைது..
சென்னை முகப்பேர் கிழக்கு ஸ் பேர்டன் நகர் 2வது தெரு வில் சக்கரவர்த்தி மகன் விஷ்ணு ரூபன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா நல்லூர் கிராமத்தில் 66 சென்ட் நிலம் மதிப்பு ரூபாய் ஒரு கோடி கொடுத்து ஞானப்பிரகாசம் மனைவி பாக்கியம் என்பவரிடம் 2003 ஆம் ஆண்டு செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தின் கிரையம் பெற்றேன் இந்த நிலத்தில் பாதுகாப்பிற்காக முள்வேலி கம்பி அமைத்து உள்ளே சிறிய வீட்டினை ஏற்படுத்தி விவசாயம் செய்து வருவதாகவும் அப்போது திடீரென எனது நிலத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு ரவுடி பெயர் ஜாகிர் உசேன் வயது 54 தகப்பனார் பெயர் அப்துல் கபூர் பள்ளித் தெரு சாமிநாத புறம் வேங்கை வாயில் கிழக்கு தாம்பரம் என்பவன் என்னிடத்தில் வந்து இது யாருடைய இடம் தெரியுமா யாரைக் கேட்டு பயிர் செய்கிறாய் இதோ பார் என்னிடத்தில் ஆவணங்கள் உள்ளது என அடியாட்களை வைத்து மாட்டுக்கறி வெட்டுவது போல் வெட்டி விடுவேன் என மிரட்டினான் மேலும் ஜேசிபி இயந்திரத்தை வைத்து பயிர்களை நாசம் செய்தான் நானே தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரவுடி என மிரட்டல் விடுத்தான் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் நில அபகரிப்பு பிரிவு துணை ஆணையர் பெருமாளை அழைத்து விசாரித்து தனிப்படை அமைக்க உத்தரவிட்டார் அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் அதிரடி போலீஸ் படையினர் வழக்கு பதிந்து போலீஸ் தேடுவதாக அறிந்து ஜாகிர் உசேன் தலைமறைவாகி விட்டான் போலீசார் அவனை இரவு பகலாக தேடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்