கோவை : காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.இந்த நிலையில் கோவையில் சில இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஆர். எஸ் .புரம், பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 34) ராஜேஷ் (வயது 28) முருகன் ( வயது 45) கவுண்டம்பாளையம் முத்துராஜா (வயது 23) ரவிக்குமார் (வயது 27) சத்தியமூர்த்தி (வயது27) துடியலூர் ரவி கே. ராஜா (வயது23) செல்வபுரம் ரஞ்சித் கிருஷ்ணன் ( வயது 23) சிங்காநல்லூர் கணேசன் ( வயது 39)காண்டிதரன் (வயது 24)இளங்கோ(வயது 48 )அசோக்குமார் (வயது 41) டேனியல் (வயது 40) வீர சேகரன்(வயது 48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 1,257 மது பாட்டில்களும், ரூ 13 ஆயிரத்து 140 பணமும்,பறிமுதல் செய்யப்பட்டது.,