ஆவடி: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏன் கஷ்டப்பட வேண்டும் என்கிட்ட தீபாவளி பண்டை போடுங்கள் தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மோகனா வயது 42 கணவர் பெயர் நந்தகோபால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மணலி என்பவள் கடந்த நான்கு வருடங்களாக வாங்க வாங்க தமிழ்நாட்டில் யாரும் என்ன மாதிரி தீபாவளி சீட்டு நடத்தி பொருட்களை கொடுத்து இருக்க மாட்டாங்க என ஏமாற்றி 31 பேரிடம் ரூபாய் 63 லட்சத்தி 52 ஆயிரத்து 560 பணத்தை வசூல் செய்து விட்டு யாருக்கும் எந்த பொருட்களையும் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சித்ரா வயது 49. கணவர் பெயர் சீனிவாசன் முதல் மெயின் ரோடு எம் எம் டி மாத்தூர் மணலி என்பவர் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார். ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றவாளி மோகனா போலீசாரிடம் சிவகாசியில் இருந்து பட்டாசு லோடு வந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கு தேவையானதை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்னை காப்பாற்றுங்கள் என கதறி அழுதார் போலீசாரோ இந்த தீபாவளி பண்டிகை புழல் மத்திய சிறையில் தான் அங்கே போய் ஜாலியாக களியை திங்கு எனக்கூறி பூந்தமல்லி ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் ஸ்டாலின் முன்பாக ஆஜர்படுத்தி நேர்மையாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குற்றவாளி மோகனாவிற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10,000 அபராத தொகையும் கட்ட வேண்டும் என தீர்ப்பளித்தார் . தீர்ப்புக்கு பின்பு மோகனா குழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 36 லட்சத்து 44 ஆயிரத்து 550 வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார்..