தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள் மாநாட்டில் 2 வது நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
”அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், அரசுக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1100 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ”காலை உணவு திட்டடத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் . நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாதம் தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நீங்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்