கீழக்கரையில் உணவு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr.G. விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராஜ், ராம்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு (Self Audit Form) படிவத்தை உணவக உரிமையாளர்கள் விண்ணப்பித்து சமர்பிக்க வேண்டும் வரக்கூடிய வாடிக்கையாளர்கள் நலன் கருதி  பாதுகாக்க கடைகளில் கொசு ஒழிப்பு மேற்கொண்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்தும் கடைகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
உணவு கடைகளில் பணிபுரியும் வேலையாட்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பணி செய்கிறார்களா என்று உணவக உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும் நெகிழி பொருட்கள் கடைகளில் விற்பனை தவிர்க்க வேண்டும் உணவு திண்பண்டகளில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மக்களுக்கு வழங்க வேண்டும் உணவு பொருட்களை தினந்தோறும் காலாவதி தேதி சரிபார்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் சான்றிதழ் மற்றும் whatsapp ஸ்டிக்கர் பார்வையில் படும்படி ஒட்டி வைக்க வேண்டும் உணவு பொருட்களில் காலாவதி தேதி முடிந்த உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தேதி முடிவடைந்தால் விரைவில் உணவக உரிமையாளர் உரிமத்தை புதுப்பித்தல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழி முறைகளை உணவக உரிமையாளர்கள் பின்பற்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர் . இக்கூட்டத்தில் கீழக்கரை சுற்றியுள்ள கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.