டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸின் கட்சியில் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கலந்தாலோசித்தனர்.
இதில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசப்பட்டது.
இன்று அக்டோபர் 9ம் தேதி திங்கள் கிழமை, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உள்பட பல்வேறி விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு இருந்த UPA (United Progressive Alliance) அரசு நடைபெற்றபோது ராகுல் காந்தி பேசிய சில கருத்துக்கள் இப்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதில் “நான் ஒரு பல்கலைக்களத்திற்கு சென்று மாணவர்களிடம் பேசினாலும் சரி, அல்லது ஒரு டீ கடைக்கு சென்று அந்த டீ கடைக்காரரிடம் பேசும்போதும் சரி அவர்களின் ஜாதி என்ன என்பதை பற்றி நான் பேசமாட்டேன்” என்று கூறியுள்ளார்.
அதுவே இப்பொது மோடி அவர்களின் தலைமையிலான அரசு நடைபெறும்போது “நாடு முழுவதும் கட்டாயம் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கவேண்டும், அது ஏழை எளிய மக்களுக்கு நல்லது” என்பர் அவர் பேசியுள்ளார். இப்படி சாதி குறித்து இரு வேறு விதத்தில் ராகுல் காந்தி பேசியது, காங்கிரஸ் சாதியை ஆயுதமாக கொண்டு நாடகமாடுகிறதா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது என்றே கூறலாம். ட்விட்டர் பக்கத்தில் இது மாபெரும் விவாத பொருளாக மாறியுள்ளது..