குழந்தை கடத்தலில் கைதான பெண் ஆலாந்துறை காவல் நிலையத்தில் இறந்தது எப்படி..? மாஜிஸ்திரேட் முன் பிரேத பரிசோதனை- நேரில் விசாரணை.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்.. இவர் தனது மனைவி ரதி மற்றும் தன் ஒன்றரை வயது ஆண்குழந்தை ஹரிஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம்மன் கோவிலுக்குசாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அங்கு கடலில் குளிப்பதற்காக சென்றனர். .அப்போதும் முத்துராஜ் கடைக்குச் சென்றார் .இந்த நிலையில் ஒன்றரை வயது குழந்தை ஹரிஷ் அழுது கொண்டே இருந்தது .அப்போது குளிக்க வந்த இடத்தில் திடீர் பழக்கமான 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அந்த குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக தூக்கிச் சென்றார் .பின்னர் அந்த பெண்ணையும் குழந்தையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருச்செந்தூர் கோவில்கடற்கரை புறக் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் கோவிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவிறக்க காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 40 வயது மதிக்க தக்கபெண், ஆண் ஒருவருடன் குழந்தையை மோட்டார் சைக்கிள் கடத்திச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை வைத்துபோலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண். பதிவுஎண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண். மற்றும் அவர்கள் தொடர்பான தகவலை திருச்செந்தூர் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்றது தம்பதி என்பது தெரியவந்தது. இதற்கிடையில் குழந்தையை கடத்திய தம்பதி கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே பதுங்கிஇருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து திருச்செந்தூர் போலீசார் கோவை போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் ஆலந்துறை போலீசார் பூண்டி முட்ட த்துவயல் குளத்தேரி அருகே பதுங்கி இருந்த அந்த பெண்ணையும் அவரது கணவரையும் பிடித்துவிசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் ( வயது 45 )அவரது மனைவி திலகவதி ( வயது 40) என்பதுதெரியவந்தது. குழந்தையை கடத்தியதைஅவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களிடம் குழந்தை இல்லை. அது குறித்து கேட்டபோது சேலத்தில் உள்ள வீட்டில் தங்களது உறவினர்களிடம் விட்டுவிட்டு கோவை வந்ததாக தெரிவித்தனர். இதை யடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தவும், திலகவதியையும் பாண்டியனையும் ஆத்தூர் அழைத்துச் சென்று குழந்தையை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க முயன்றனர். இதற்காக அவர்கள் 2பேரையும் ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தம்பதியுடன் போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது திலகவதி போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு போளுவாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும்மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி,டி ஐ ..ஜி சரவண சுந்தர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர் . திலகவதி இறப்பு குறித்து விசாரணை நடத்திவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது காவல் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும்பெண்ணின் இறப்பு குறித்து நீதித்துறை விசாரணையும்நடந்து வருகிறது .இந்த நிலையில் ஆலந்துறை போலீசார் குழந்தை கடத்தல் தொடர்பாக சேலம் ஆத்தூர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து போலீசார் ஆத்தூரில் உள்ள திலகவதியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஒன்றரை வயது ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த குழந்தையை திருச்செந்தூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்..இது குறித்து மேற்கு மண்டல போலீஸ்ஐ.ஜி. பவானிஸ்வரி கூறியதாவது:- குழந்தையை கடத்திய தம்பதி கோவை ஆலந்துறை பகுதியில் இருக்கும் தகவலை திருச்செந்தூர் போலீசார் தெரிவித்தனர். இதை யடுத்து அவர்கள் கொடுத்த தகவல் பேரில் செல்போன் சிக்னல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் பிடித்தனர். அப்போது அவர்களிடம் கடத்தப்பட்ட குழந்தை இல்லாததால் விசாரணைக்காக ஆலாந்துறைகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையில் தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒன்றரை வயது குழந்தையை திருச்செந்தூரில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான்திலகவதி கழிவறைக்கு செல்வதாககூறிவிட்டுச் சென்றவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். அவர் ரத்த அழுத்தம் பாதிப்பு காரணமாக இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அந்த பெண் இறந்ததற்கான முழு விவரம்தெரியவரும்..இவ்வாறு அவர் கூறினார்..இந்த நிலையில் நேற்று காலையில் கோவை 5-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்தோஷ் ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்று திலகவதியின் சாவு குறித்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாஜிஸ்திரேட் சந்தோஷ் முன்னிலையில் திலகவதியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவ துறை தலைவர் டாக்டர். ஜெய்சிங் தலைமையில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலைதிலகவதியின் உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் திலகவதியின் உடலை பெற்றுச் சென்றனர்.இது குறித்து உயர் போலிஸ் அதிகாரிகள் கூறியதாவது: – குழந்தை கடத்தல் தொடர்பாக திலகவதி – பாண்டியன் ஆகியோரை கைது செய்து ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினோம். அப்போது கழிவறை செல்வதாக திலகவதி தெரிவித்தார். உடனே பெண் போலீசார் அவரை போலீஸ்நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு அழைத்துச் சென்றனர் .சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்து ஏற்கனவே இருந்த இருக்கையில் அமர்ந்தார். அவர் அடுத்த 10 நிமிடத்தில் திடிரென மயங்கி கீழே விழுந்தார் .அவரது வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து ரத்தம் வழிந்தது. அவருடைய கையில் வெள்ளை நிற பவுடர் போன்று இருந்தது. அது விஷ பொருளா? அதைத்தான் அவர் தின்று தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொடிய விஷத்தை வாங்கி சாப்பிட்டாரா? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான்சாவு காரணம் முழு விவரம் தெரிய வரும் இவ்வாறு அவர்கள்கூறினார்கள்.இந்த நிலையில் கடத்திச் சென்ற தம்பதியிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தையை திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் நேற்று கொண்டு சென்றனர். பின்னர் முத்துராஜ்- ரதி தம்பதியிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த ராஜ், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் தனிப்படை போலீசார் குழந்தை ஸ்ரீ ஹரிசை ஒப்படைத்தனர். அப்போது பெற்றோர் கண்ணீர் மல்க குழந்தையை கட்டித் தழுவி முத்தமிட்டனர். போலீசாருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தனர். குழந்தையின் தாய் ரதி கூறும் போது குழந்தை கடத்தப் பட்டவுடன் கோவில் வளாகத்தில் உள்ள போலீசாரிடம் தெரிவித்தேன். அவர்களின் துரித நடவடிக்கையால் எனது குழந்தை கிடைத்துள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சருக்கும் போலீசாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்கள் தங்களது குழந்தையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்..