கோவை பெட்ரோல் பங்கில் ரூ.12 லட்சம் மோசடி- 2 ஊழியர்கள் மீது வழக்கு..!

கோவை சுந்தராபுரம் செங்கோட்டையா காலனி சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவரது பங்கில் பொள்ளாச்சி முத்து கவுண்டன் புதூரை சேர்ந்த மகேந்திரன், விளாங்குறிச்சி, சேரன் மாநகரச் சேர்ந்த இளங்கோ ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். . பங்கில் வரவு -செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது ரூ 12 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பங்க் அதிபர் ஜெயராமன் சுந்தரபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெட்ரோல் பங்கில் 8 ஆண்டுகளுக்கு மேல் கேஷியராக வேலை பார்த்து வந்த மகேந்திரன் இளங்கோ ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..