கோவை அருகே உள்ள அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நேற்று தனது நண்பர் மாரிசெல்வத்துடன் சங்கோதிபாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சஞ்சய்கண்ணன் சந்தான குமார் ஆகியோர வழிமறித்து அரிவாளால் விக்னேஷ் ,மாரிசெல்வம் ஆகியோரை வெட்டினார்கள்.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் சூசையப்பா பட்டினத்தை சேர்ந்தசஞ்சய் கண்ணன் (வயது 21) மற்றும் அவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பக்கம் உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்த சந்தான குமார் (வயது 19)ஆகியோரை நேற்று கைது செய்தார்..இவர்களிடமிருந்து பட்டாகத்தி அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கத்தியுடன் சுற்றி திரிந்த சஞ்சய் கண்ணனை விக்னேஷ் தடுத்து நிறுத்தி தாக்கி போலீசில் ஒப்படைத்து விடுவதாக மிரட்டினாராம். இதற்கு பழி வாங்குவதற்காக இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.