காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்து ஏற்படுத்தி, தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டி.டி.எஃப்.
வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் டிடிஎஃப் வாசன் கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் நீதிமன்ற காவலை 16/10/23 தேதி 30/10/23 தேதி வரை என 3 முறை நீட்டிக்கப்பட்டது.டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் 3 முறையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையும் என 4 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் 16/10/23 இன்றுடன் முடியும் நிலையில் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -1ல் டிடிஎப் வாசனை புழல் சிறையில் இருந்து போலீசார் காணொளி காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி இனியா கருணாகரன், விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு 4வது முறையாக வரும் நவம்பர் மாதம் 09/11/23 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். யூடூப்பர் டிடிஎஃப் வாசனுக்கு வது நவம்பர் 09/11/23 தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டதால்,கடந்த 42 நாட்களாக சிறையில் இருக்கும் டிடிஎப் வாசன் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பையும்,பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த டிடிஎஃப் வாசனை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறைய செய்த டிடிஎப் ஜாமீன் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது .
ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்யப்பட்ட வாசனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் பிறப்பித்த உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாசன் மீது உள்ள பல்வேறு வழக்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் 8 வழக்குகளும், , கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும் இமாச்சல பிரதேசத்தில் ஒரு வழக்கும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.