குடிபோதையில் தம்பிக்கு கத்தி குத்து – அண்ணன் கைது..!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராவநத்து கோலனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன்கள் உதயகுமார் (வயது 27) ஆறுச்சாமி ( வயது 23) குடிபோதையில் அண்ணன் -தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த அண்ணன் உதயகுமார் தம்பி ஆறுச்சாமியை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமார் தனது தம்பியிடம் அவசர தேவைக்காக இருசக்கர வாகனத்தை இரவல் கேட்டாராம். அதற்கு ஆறுச்சாமி கொடுக்க மறுத்தார். இதனால் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அண்ணன் உதயகுமார் நேற்று கைது செய்தனர். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..